குற்றாலம் ஐந்தருவியில் குளிக்கத தடை..

Classic

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதித்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகள் வெப்ப நிலை மாறி, முழுமையாக குளுமையான சூழல் நிலவிவருகிறது. மாலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து சாரல் மழைபெய்து வருவதால், குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால், ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையின் காரணமாக, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

 

News Point One: 
குற்றாலம் ஐந்தருவியில் குளிக்கத தடை..
News Point Two: 
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
News Point Three: 
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சாரல் மழை
News Counter: 
100

aravindh