புனேவிலும் சிஎஸ்கே அணி விளையாடுவதில் புதிய சிக்கல்

புனே, சிஎஸ்கே, ஐபிஎல், கிரிக்கெட், Pune, CSK, IPL, Cricket
Classic

ஐபிஎல் போட்டிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து சென்னை போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டது. தற்போது புனேவிலும் சிஎஸ்கே அணி விளையாடுவதற்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழகத்தில் போராட்டம் நடைப்பெற்று வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் சென்னை போட்டிகள் புனேவில் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புனேவில் சென்னை போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் ஐபிஎல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் புனேவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மைதானத்திற்கு தண்ணீர் எப்படி கொண்டு வருவீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். புனேவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் சிஎஸ்கே போட்டிகளை புனேவில் நடத்துவதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

News Counter: 
200

vijay