காப்பி எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி Rk செல்வமணி புகார்

Classic

புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வைத்து காப்பி எடுத்து வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.  அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆர்.கே. செல்வமணி அளித்துள்ள புகார் மனுவில், திரையரங்குகளில் வைத்து சட்டவிரோதமாக காப்பி எடுத்து ஆன்லைன் மற்றும் மற்றும் திருட்டு விசிடி யிடியில் வெளியிடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சென்னையை தலைமையிடமாக வைத்துள்ளதாகவும், இது போன்ற முறைகேடுகளில் ஈடுபவர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் உதவி ஆணையர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடுவதாக உறுதியளித்ததாக தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind