2.0  படத்தின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியீடு 

share on:
Classic

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் '2.0'. ரஜினி - சங்கர் கூட்டணியில் வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இந்த படம் வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் சுமார் 543 கோடி ரூபாயை படத்தின் தொழில்நுட்ப பணிகளுக்கு மட்டுமே செலவழித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டுவிழா துபாய்யில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட படத்தின் டீசருக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. 

இதனை தொடர்ந்து படத்தின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார். இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் ராஜாளி, எந்திர லோகத்து சுந்தரியே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடர்ன் உலகத்தில் அனைவருமே செல்போனுக்கு அடிமையாக இருக்கின்றனர். அந்த செல்போனை மையப்படுத்தியே படத்தின் கதை நகர்வதாக படத்தின் டீசரில் இருந்து தெரிகிறது.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu