பிரதமர் பதவிக்கு தகுதியானவர்களை ராகுல் காந்தி புறக்கணித்து விட்டார் - மோடி 

Classic

காங்கிரஸ் கட்சியில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்களை ராகுல் காந்தி புறக்கணித்து விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் பங்கார்பேட்டை பகுதியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றால் தான் பிரதமராக பதவி ஏற்கத் தயார் என ராகுல் காந்தி அறிவித்தது பற்றி பிரதமர் மோடி விமர்சித்தார். 

இந்த அறிவிப்பின் மூலம் காங்கிரசில் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டவர்கள், கட்சிக்காக 40 ஆண்டுகளாக உழைத்தவர்கள்,  கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டோர்  என அனைவரையும் ராகுல் காந்தி புறக்கணித்துள்ளதாக மோடி  குறிப்பிட்டார். 

தான் அடுத்த பிரதமர் என ஒருவரால் அறிவிக்க முடியும் என்றால் அதற்கு பெயர் கர்வம் இல்லையா என்றும் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

News Counter: 
100

sankaravadivu