தர்காவில் பிரார்த்தனை செய்த ராகுல் காந்தி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்பு தர்காவில் பிரார்த்தனை செய்த ராகுல் காந்தி

தர்காவில் பிரார்த்தனை செய்த ராகுல் காந்தி

 தர்காவில் பிரார்த்தனை செய்த ராகுல் காந்தி

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராய்ச்சூரில் உள்ள தர்காவில் பிரார்த்தனை செய்தார்.

குஜராத் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் குஜராத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார்.  அப்போதே பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், கர்நாடகாவில் உள்ள இந்து கோயில்களுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கர்நாடகாவுக்கு சென்ற ராகுல், பிரசித்தி பெற்ற ஹூலிசும்மா கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, இன்று கர்நாடகா முதலமைச்சர்  சித்தராமையாவை சந்தித்த ராகுல், ராய்ச்சூரில் உள்ள தர்காவிற்கு சென்று பிரார்த்தனை செய்தார். அதை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேருந்தில் தனது பயணத்தை தொடர்ந்தார். மேற்கொண்டு பல்வேறு கோயில்களுக்குச் செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.