பாட்ஷாவாக ராகுல்காந்தி திரும்ப வருவார்: நக்மா

Classic

பாட்ஷாவாக ராகுல்காந்தி திரும்ப வருவார் என்று மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் சுற்றுபயணமாக புதுச்சேரி வந்துள்ள  நக்மா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், சோரப்பட்டு கிராமத்தில் நடந்த மகளிர் காங்கிரஸ் பயிற்சி முகாமில் கலந்து  கொண்டு பேசிய  அவர்,  அடுத்த பிரதமராக வரக்கூடிய தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது என்றார்.

மேலும்,  “நீ நடந்தால் நடை அழகு” மற்றும் “ஸ்டைலு..ஸ்டைலு” ஆகிய பாடல்களை பாடி, ஆட்டத்துடன் அசத்தினார்.   இந்த பாடல் ரஜினிக்கு அல்ல என்றும்,  ராகுல் காந்திக்கு என்று கூறியதும் தொண்டர்கள்  மத்தியில் கை தட்டல்கள் அதிகமானது. 
 

News Counter: 
200

Parkavi