இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஇலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி

இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி

February 12, 2018 138Views
இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. 

இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், மைத்ரிபால  சிறிசேனா வெற்றி பெற்று அதிபர் ஆனார். அதனைதொடர்ந்து, முதன் முதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அங்கு நடைபெற்றது. இந்த தேர்தல் ஆளும் கூட்டணிக்கு மிகுந்த போட்டியாக விளங்கிய நிலையில், மொத்தமுள்ள 341 உள்ளாட்சி கவுன்சில்களில் 340 கவுன்சில்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், எதிர்பாராத விதமாக, முன்னாள் அதிபர்  ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி அமோக வெற்றி அடைந்தது. மேலும்,  அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி மற்றும் பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயின் கட்சியும் பின்னடைவை சந்தித்தன. தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி  10 இடங்களை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.