புதுச்சேரி எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு தர வரிசை பட்டியல் வெளியீடு

Classic

புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான தர வரிசை பட்டியல் வெளியிட்டதில் புதுச்சேரி மாணவன் விக்னேஷ் ராமன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அரசின் ஒருங்கிணைந்த சேர்க்கை முறையான சென்டாக் அமைப்பு மூலம் நிரப்பபட்டு வருகின்றன. 

இந்நிலையில் 2018 - 19 கல்வி ஆண்டிற்கான அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ பாடப் பிரிவுகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப்பட்டியலை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் நிர்வாகம் www.centaconline.in என்ற அதன் இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. 

இதில் புதுச்சேரி பொதுபிரிவில் முதல் இடத்தை விக்னேஷ் ராமன் என்ற மாணவனும், இரண்டாவது இடத்தை அட்சை என்ற மாணவியும், மூன்றாவது இடத்தை அருணாச்சலம் என்ற மாணவனும் பிடித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravindh