இலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்

இலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்

இலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல்  போனவர்களின் உறவினர்கள் போராட்டம்

இலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இலங்கை அரசு உருவாக்கியுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என, இலங்கை இறுதிப்போரில்  உறவுகளை தொலைத்தோர் தெரிவித்துள்ளனர்.  முன்னதாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த மண்டபம் முன்,காணாமல் போனோரின் உறவினர்கள்    ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இறுதி கட்ட யுத்தத்தின் போது, காணாமல் போனவர்களைக் கண்டறிய இதுவரையில் இலங்கை அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பு ஏற்பட்டது.