காவிரி விவகாரம்: "ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிடக் கூடாது"

Classic

காவிரி விவகாரத்திலிருந்து அரசியலை அகற்றினால் எல்லாம் தானாக சரியாகிவிடும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். 

காவிரி விவகாரம் தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், காவிரி நீரை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது அரசியல்வாதிகள் அதில் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஒரு நதி நீரை கடித்து வாழ்ந்து, விவசாயம் செய்த மக்கள் சணிடையிடுவது சரியல்ல என்றும்,  ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிடக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

தேர்தல் நேரத்தில் மட்டும் காவிரியை மீட்போம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றும் அரசியல்வாதிகளின் செயல் இனிமேலும் தொடரக்கூடாது என்றும், காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்களுக்கு எதிராக அரசியல்வாதிகள் துரும்பைக் கூட கிள்ளுவதில்லை எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

News Point One: 
காவிரி விவகாரத்திலிருந்து அரசியலை அகற்றினால் தானாக சரியாகிவிடும்
News Point Two: 
ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிடக் கூடாது
News Point Three: 
ஏமாற்றும் அரசியல்வாதிகளின் செயல் இனிமேலும் தொடரக்கூடாது
News Counter: 
100

sankaravadivu