தென்மாவட்டங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம்! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புதென்மாவட்டங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம்!

தென்மாவட்டங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம்!

February 14, 2018 212Views
தென்மாவட்டங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம்!

தூத்துக்குடியில் எரிவாயு ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தென் மாவட்டத்தில் சமயல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலிய நிறுவனம் உட்பட  கேஸ் நிறுவனங்கள் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தத்தை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகம் புதுப்பித்து வெளியிட்டு வருவது வழக்கம்.

ஆனால் இம்முறை வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தம் 3 வருடங்களுக்கு பதிலாக 5 வருடங்களுக்கு கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்தமிழக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி நெல்லை குமரி விருதுநகர் தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்வது பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.