ரஷ்ய விமானம் வெடித்து சிதறியதில் 71 பேர் உயிரிழப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புரஷ்ய விமானம் வெடித்து சிதறியதில் 71 பேர் உயிரிழப்பு

ரஷ்ய விமானம் வெடித்து சிதறியதில் 71 பேர் உயிரிழப்பு

February 12, 2018 197Views
ரஷ்ய விமானம் வெடித்து சிதறியதில் 71 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம்  கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில்  71 பயணிகள் உயிரிழந்தனர்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, ஆர்ஸ்க் நகருக்கு  தனியார் விமானம் ஒன்று 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்டு சென்றது. அப்போது, விமானம் பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனைதொடர்ந்து, மாஸ்கோ பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, அப்பகுதியில் மீட்புப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 71 பேரும் உயிரிழந்ததாக தெரிய வந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.