மீண்டும் விஜயகாந்தை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன் : சந்திரசேகர் 

Classic

80களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த்,தற்போது தே.மு.தி.க கட்சியின் தலைவராக உள்ள  இவருக்கு நேற்று திரையுலகில் 40 ஆண்டுகள் பணியாற்றியதற்கான விழா நடைபெற்றது.

எஸ்.ஏ. சந்திரசேகர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் 1981ல்  இயக்குனராக அறிமுகமான முதல் படம் 'சட்டம் ஒரு இருட்டறை' இப்படத்தில் கதாநாயனாக அப்போதைய முன்னணி நடிகர் விஜயகாந்த் நடித்திருந்தார்.இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததை தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று படங்களும் விஜயகாந்தை வைத்தே இயக்கிருந்தார்.

 பின்னர் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் வளம் வந்த இவர் இதுவரை விஜயகாந்தை வைத்து மட்டும் 17 படங்கள் இயக்கியுள்ளார். 

நேற்று திரைப்பயணத்தில் தனது 40 ஆண்டுகளை எட்டிய நடிகர் விஜயகாந்த்துக்கு அவரது கட்சி தொண்டர்கள் மாபெரும் மாநாட்டு விழா ஒன்றை நடத்திருந்தனர் இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு விஜய்காந்துடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

இதில் பேசிய இயக்குனர் சந்திரசேகர், மீண்டும் விஜய்காந்தை இயக்க விரும்புவதாக கூறினார். உடனே அந்த படத்தை தான் தயாரிக்கிறேன் என கலைப்புலி தாணு முன்வந்தார். ஆனால் விஜய்காந்த் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. விஜயகாந்த் சம்மதித்தால் அடுத்த வருடமே இதற்கான பணிகள் தொடங்கும் என எஸ் ஏ சந்திரசேகர் கூறினார்.  எஸ்.ஏ சந்திரசேகர் தற்போது டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News Point One: 
மீண்டும் விஜயகாந்தை இயக்க விரும்புவதாக இயக்குனர் சந்திரசேகர் கூறினார்
News Point Two: 
தயாரிக்கிறேன் என கலைப்புலி தாணு முன்வந்தார்
News Point Three: 
திரையுலகில் 40 ஆண்டுகள் பணியாற்றியதற்கான விழா
News Counter: 
200

Parkavi