தெற்காசிய கால்பந்து இறுதிப்போட்டி: நடப்பு சாம்பியனான இந்திய அணி - மாலத்தீவு அணியும் நாளை மோதல்.

share on:
southasian football
Classic

தெற்காசிய கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி நாளை மாலத்தீவு அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது.வங்கதேசத்தில் 7 நாடுகள் பங்கேற்றுள்ள தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நாளை நடைபெறவுள்ள இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணி, மாலத்தீவுடன் மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. தெற்காசிய கோப்பை தொடரில் இந்தியா இதுவரை 7 முறை பட்டத்தை வென்றுள்ளது.

மேலும், இந்தியா-மாலத்தீவு அணிகள் இறுதிப்போட்டியில் 2 முறை மோதியுள்ளதில் இரு அணிகளும் தலா ஒருமுறை பட்டம் வென்றுள்ளன. ஆகையால், நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்கவைக்கும் முனைப்புடன் இந்திய அணியும், 10ஆண்டுக்கு பின் மீண்டும் பட்டம் வெல்லும் முனைப்பில் மாலத்தீவு அணியும் உள்ளன.

News Counter: 
100
Loading...

Anand