8 வழிச்சாலை திட்டத்திற்கு நில அளவை செய்ய எதிர்ப்பு - பெண்கள் உட்பட 5 பேர் கைது

Classic

சேலத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் அளவை செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் முதல் சென்னைவரை 277 கிலோமீட்டர் தெலைவுக்கு அமையவுள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு சேலம் மாவட்டத்தில் மட்டும்  36 கிலோமீட்டர் தொலைவுக்கு 26 கிராமங்களில் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்கள், தங்களது ஆட்சேபனையை கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்த சாலை அமையவுள்ள ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி கருத்து கேட்பு நடைபெறவுள்ள நிலையில், இன்றைய தினம் வருவாய் துறையினர், நில அளவை துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அடிமலை புதூர் பகுதியில் நிலம் அளவீடு செய்தனர். கடந்த வாரம் நடைபெற்ற நில அளவையின்போது, பொதுமக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், அதிகாரிகள் தங்களது பணியை பாதியிலேயே கைவிட்டனர். 

இதனிடையே, இன்றைய தினம் பொதுமக்கள் எதிர்ப்பு  தெரிவிக்க நேரிடும் என்பதால், ஏராளமான போலீசார் குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், அடிமைலை புதூர் பகுதியில் தோட்டத்தில் நில அளவை செய்ய  முயன்றபோது, நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravindh