பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Classic

மாவோயிஸ்டு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு அதிகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் பல்வேறு வகையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், அண்மையில் மாவோயிஸ்ட்கள் 20-க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இதைத் தொடர்நது பிரதமர் நரேந்திர மோடிக்கு, மாவோயிஸ்டுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்துவது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை இயக்குநர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
 

News Counter: 
100

Parkavi