விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களுடன் செல்ஃபி எடுத்த கொடூரம்...மரணிக்கும் மனிதம்..!

Classic

ராஜஸ்தானில், சாலை விபத்தில் சிக்கியோருக்கு உதவுவதற்கு மாறாக, சம்பவ இடத்தில் செல்ஃபி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் பர்மரில் (Barmer) பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்தனர். இவர்கள் உயிருக்கு போராடி துடிதுடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் குழுமி வேடிக்கை பார்த்திருந்த மக்கள் எவரும் உதவ முன்வரவில்லை. 

இதற்கு மாறாக, விபத்துக்குள்ளானவர்களின் வலியை தங்களது செல்ஃபோன்களில் காணொலியாக பதிவு செய்தனர். இது மட்டுமின்றி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களின் அருகில் சென்ற நபர் ஒருவர் செல்ஃபி எடுத்து அதனை அவரது நண்பர்களுக்கு பகிர்ந்தார். இறுதிவரை எவரும் உதவ முன்வராததால் விபத்தில் சிக்கிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravindh