ஏற்றத்துடன் துவங்கிய பங்கு சந்தை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஏற்றத்துடன் துவங்கிய பங்கு சந்தை

ஏற்றத்துடன் துவங்கிய பங்கு சந்தை

February 12, 2018 217Views
ஏற்றத்துடன் துவங்கிய பங்கு சந்தை

இந்திய பங்குச்சந்தை மீண்டும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 177 புள்ளிகள் உயர்ந்து 34,183 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 49 புள்ளிகள் ஏற்றத்துடன் 10,504 புள்ளிகளிலும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் உலக பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இந்த சரிவுப்போக்கு தற்போது விலகி இருப்பதால் முதலீட்டாளர்கள் சற்று ஊக்கம் பெற்றுள்ளனர்.