உறுப்பு மாற்று சிகிச்சை முறைகேடுகளை தடுக்க வேண்டும் - வைகோ

Classic

உறுப்பு மாற்று சிகிச்சை செய்வதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.   

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உடல் உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக நம் நாட்டு நோயாளிகள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும்போது, வெளிநாட்டு நோயாளிகளிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது என்பதற்காக விதிமுறைகளை மீறி உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்று வரும் இதுபோன்ற முறைகேடுகள் குறித்து ஏப்ரல் 3, 2018 இல் டெல்லியில் மத்திய அரசு நடத்திய உயர்நிலைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதையும் வைகோ சுட்டிகாட்டியுள்ளார்.

இதைக் காரணமாக  கூறி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொது சுகாதாரத்துறையை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் சேர்க்கவும் முயற்சிகள் நடைபெறுவதாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு சுகாதாரத்துறையையும் மத்திய அரசுக்கு தாரை வார்த்துக்கொடுத்துவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். (card 5)மேலும்,  உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நடைபெற்று வரும் சட்ட மீறல்களை களைய வேண்டும் எனவும் வைகோ  கோரிக்கை விடுத்துள்ளார்.

News Counter: 
100

aravindh