அரசியலில் இறங்குகிறார் சிம்பு

share on:
Classic

நடிகர் சிம்பு சமீபத்தில் பல சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். தந்தை அரசியலில் இருந்தாலும் சிம்பு தான் அரசியலுக்கு வருவதாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

இயக்குநர் மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வரும் சிம்பு தற்போது அரசியல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. மாநாடு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். வி ஹவுஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படம் அரசியலை மையமாக கொண்ட படம் என்பதை போஸ்டரிலேயே குறிப்பிட்டுள்ளனர். படத்தின் பெயர் மற்றும் போஸ்டரை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, சிம்பு ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Parkavi