தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ் - ஜெஸ்ட் ட்ரை செய்யலாமே !

share on:
Classic

தொப்பையை குறைக்க தினமும் காலை உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் மிக முக்கிய ஒன்று. ஓடுதல் மிக அவசியம். அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டாலும் தொப்பை எளிதில் குறைந்து சீரான உடல் எடையை பெற முடியும் . 

 சைக்கிளில் பயிற்சி மேற்கொள்வதன் மூலமும் தொப்பையை குறைக்க முடியும். 

 காய்கறிகளை அதிகம் சாப்பிடவும். அதிலும் உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.

 சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

தண்ணீர் அதிகம் குடிக்கவும் தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில் தொப்பை குறையும்.

தினந்தோறும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைப்பில் மாற்றம் தெரியும்

உணவில் அதிகம் உப்பு சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

 இஞ்சி பொதுவாகவே கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. தொப்பையை குறைக்க உணவில் இஞ்சி சேர்த்துக்கொண்டால் நலன் தரும். 

 வெளியில் சாப்பிடுவதை அறவே தவிர்த்தல், நல்ல உடற்பயிற்சி போன்றவற்றால் முற்றிலுமாக உங்களின் தொப்பையைக் குறைக்க முடியும்.

நேரம் கிடைக்கும் போது தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் இடுப்பை  பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன்புறம் அழுத்துவது போன்ற பயிற்சிகளை செய்து வந்தால், தொப்பை குறையும்.

News Counter: 
100
Loading...

sankaravadivu