குளிர்கால் ஒலிம்பிக்: ட்ராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் தென்கொரிய வீரர் வரலாற்று சாதனை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகுளிர்கால் ஒலிம்பிக்: ட்ராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் தென்கொரிய வீரர் வரலாற்று சாதனை

குளிர்கால் ஒலிம்பிக்: ட்ராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் தென்கொரிய வீரர் வரலாற்று சாதனை

February 11, 2018 141Views
குளிர்கால் ஒலிம்பிக்:  ட்ராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் தென்கொரிய வீரர் வரலாற்று சாதனை

தென்கொரியாவின் பியான்ங்சங் நகரில் 23வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது.  இதன் ஆடவர் 1500மீட்டர் ட்ராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. 9 லேப்ஸ்களாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். 

தொடக்கத்தில் முதல் 6 லேப்ஸ்களில் தென்கொரிய வீரர் Daeheon Hwang முன்னிலை வகித்தார். பின்னர் மற்றொரு தென்கொரிய வீரர் லிக் ஹியூ-ஜின் முன்னிலை வகித்தார். போட்டியின் நடுவில் ஒரு சில வீரர்கள் சறுக்கி விழுந்தன்ர.  3வது வீரராக களமிறங்கிய தென்கொரிய வீரர் Lim Hyo-jun நேர்த்தியாக இலக்கை நோக்கி விரைந்தார். முடிவில் பந்தய தூரமான 9 லேப்ஸ்களை 2மணி நேரம் 10நிமிடங்கள் 485வினாடிகளில் கடந்து தென்கொரிய வீரர் Lim Hyo-jun தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம், ஒலிம்பிக்-ல் புதிய வரலாறும் படைத்தார். முன்னதாக, கொரிய வீரர் லீ  ஹங் சூ 2010 ஒலிம்பிக் போட்டியில் 2மணி நேரம் 10 நிமிடங்கள் 949வினாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது அவரது சாதனையை லிம் ஹியூ-ஜூன் முறியடித்துள்ளார் .