தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றி

share on:
Classic

தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலங்கை அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

பல்லேகலே (pallekele) மைதானத்தில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி, இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் சீராக ரன் சேர்க்க, குசெல் பெரேரா நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். 

இலங்கை அணி 39 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழந்து 306 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. 

பின், மழை நின்றதும் தென்னாப்ரிக்க அணிக்கு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 21 ஓவருக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

இதில் தென்னாப்ரிக்க வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஆம்லா மட்டும் 40 ரன்கள் சேர்த்தார். 

முடிவில் 21 ஓவருக்கு 9 விக்கெட்டை இழந்து தென்னாப்ரிக்கா 187 ரன்கள் எடுத்தது. 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் ஆறுதல் வெற்றியை அடைந்தது.

News Counter: 
100
Loading...

sankaravadivu