காவிரி விவகாரத்தில் கர்நாடகம் காலம் தாழ்த்துவதாக ஸ்டாலின் கண்டனம்

Classic

கர்நாடக அரசு தங்களின் பிரதிநிதி பெயரைக் கொடுக்கத் தவறினால், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி விவகாரத்தில் தமிழக   முதலமைச்சரையும், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளையும் சந்திக்க மறுத்த பிரதமர் மோடி, கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதற்கு மட்டும் நேரம் ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். இதனை எண்ணி பார்க்கும் போது, தமிழகத்தையும்,  தமிழக விவசாயிகளையும் பிரதமர் மோடி ஒரு பொருட்டாகவே கருத்தவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். காவிரிப் பிரச்சினையில் மேலும் குழப்பத்தையும், நெருக்கடியான நிலையையும் நீட்டிக்க மத்திய அரசு, நாடாளுமன்றத் தேர்தல் லாபத்தை மனதில் கொண்டு கர்நாடக அரசுடன் இணக்கமாகச் செயல்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடக கண்ணில் வெண்ணையையும், தமிழக கண்ணில் சுண்ணாம்பையும் தடவ எத்தணிக்கும் மத்திய அரசின் வேடம் வெகுநாட்களுக்கு நிற்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, மேலாண்மை ஆணையம் தொடர்பாக, கர்நாடக அரசு உறுப்பினர்கள் பெயரைக் கொடுக்கத் தவறினால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்றும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravindh