சர்கார் பட விவகாரத்தில் டி.ராஜேந்திரன் விஜய்க்கு ஆதரவு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube சர்கார் பட விவகாரத்தில் டி.ராஜேந்திரன் விஜய்க்கு ஆதரவு
close
முகப்புசர்கார் பட விவகாரத்தில் டி.ராஜேந்திரன் விஜய்க்கு ஆதரவு

சர்கார் பட விவகாரத்தில் டி.ராஜேந்திரன் விஜய்க்கு ஆதரவு

சர்கார் பட விவகாரத்தில் டி.ராஜேந்திரன் விஜய்க்கு ஆதரவு

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். 

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய சர்கார் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சர்கார் ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் இருந்ததால், பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர், 

இதனால், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு 10 கோடி ரூபாயை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. 

மேலும், நடிகர் விஜய் இந்த வழக்குக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று தனது புது படத்தின் அறிவிப்பை பத்திரிக்கையாளர்களிடம் T.ராஜேந்திரன் பகிர்ந்துக்கொண்டார். 

அப்போது சர்கார் பட வழக்கில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த டி.ராஜேந்திரன், "சினிமா" மக்களை என்றும் தவறான பாதைக்கு கொண்டு செல்வதில்லை எனவும், விஜய் படத்திற்கு மட்டும் இப்படி செய்வது நியாமில்லை எனவும் கூறினார். தவிர சினிமாவில், கதாபாத்திரத்திற்கு தேவையானதை ஒரு கலைஞன் செய்துதான் ஆகவேண்டும் என்றும் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.