ஓரினச் சேர்க்கை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் - மத்திய அரசு

Classic

ஓரினச் சேர்க்கையை குற்றமில்லை என அறிவிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவை எடுக்கலாம் என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இயற்கைக்கு மாறான எந்த உறவும் சட்டவிரோதம் என கடந்த 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், ஓரின சேர்க்கையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

மேலும் இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்யும் படியும் உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓரினச் சேர்க்கையை குற்றமில்லை என அறிவிக்க கோரிய வழக்கில் வாதிடப் போவதில்லை என்றும் நீதிமன்றம் அரசியலமைப்புக்கு உட்பட்டு முடிவெடுப்பதை ஏற்கத் தயார் எனவும்  மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. 

மேலும், ஓரினச் சேர்க்கை வழக்கில் தீர்ப்பளிக்கும் போது இந்துமத சட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தனது துணையை தேர்வு செய்யும் உரிமை சட்டத்தை மீறியதாக அமையக் கூடாது எனவும் மத்திய அரசு வலியுறுத்தியது.

 

News Counter: 
100
Loading...

aravindh