நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு தான் தோல்வி: டிடிவி தினகரன்

share on:
18 எம்.எல்.ஏ வழக்கு, டிடிவி தினகரன், சென்னை உயர்நீதிமன்றம், Madras High Court, TTV Dhinakaran
Classic

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு தான் 100 சதவீத தோல்வி என்றும் நாங்கள் 50 சதவீத வெற்றி பெற்றுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்திர பானர்ஜி, சுந்தர் கொண்ட அமர்வு மாறுப்பட்ட தீர்ப்பை அறிவித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரான தீர்ப்பு. மக்கள் இந்த தீர்ப்பினால் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீதிமன்றத்தின் தயவால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மூன்று மாதத்திற்கு நீடித்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக இருந்தால் 18 எம்.எல்.ஏக்களின் முடிவை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

vijay