close
முகப்பு டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் 

 டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் 

March 12, 2018 239Views
 டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் 

குக்கர் சின்னம் மற்றும் கட்சி பெயர் தொடர்பாக டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், டிடிவி  தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

அதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது அணி அதிமுக அம்மா என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் , கேட்ட நீதிமன்றம்,  தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 

மேலும், கட்சிக்கு தினகரன் ஒதுக்கக்கோரிய பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதனிடையே, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்கக்கோரிக்கைவிடுத்து தினகரன் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனுவை தாக்கல் செய்தார். 

மேலும், அதிமுக தரப்பில் நாளை அல்லது நாளை மறுநாள் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானதால், தினகரன் இன்று கேவியட் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது