இன்று முதல் தொடங்குகிறது மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்

share on:
MBBS, BDS, MBBS Application, MBBS Application2018
Classic

தமிழகத்தில்  மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 50 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத அகில இந்திய இடங்கள் போக, 2 ஆயிரத்து 594 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதே போன்று, சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய இடங்கள் 30 போக, மீதம் உள்ள 170 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்க உள்ளது. 

இதற்காக தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதவிர, அரசு இணையதளங்களில் இருந்தும் இன்று முதல் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News Point One: 
நாளை முதல் தொடங்குகிறது மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்
News Point Two: 
அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்
News Point Three: 
அரசு இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
News Counter: 
125
Loading...

Giri