தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
close
முகப்புதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

July 17, 2018 122Views
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லரில் 16 சென்டி மீட்டர் மழையும் வால்பாறையில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மேலும் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 சென்டி மீட்டர் மழையும், கூடலூரில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு  உள்ளதாகவும் அறிவித்துள்ளது.