தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் - ராமதாஸ்

Classic

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியாவும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடும் திகழ்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் 193 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், மகளிர் பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த முக்கியத்துவமும் தருவதில்லை என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

ஆப்கானிஸ்தா, சிரியா, சோமாலியா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருப்பதாகவும் 2011ம் ஆண்டு 4வது இடத்திலிருந்த இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பாலியல் வன்கொடுமைகள், பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்துக் கொள்வது, பொது இடங்களில் பாலியல் சீண்டல்கள்,  குடும்ப வன்முறைகள் ஆகியவை தான் பெண்களுக்கு எதிராக அதிக அளவில் இழைக்கப்படும் கொடுமைகள் என்று கூறப்படுவதாகவும், இவை அனைத்துமே தடுக்கப்பட வேண்டிய குற்றங்கள் எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவில்  2007 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 83% அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பாலியல் சீண்டல்கள், வரதட்சனைக் கொடுமை, குடும்ப வன்முறை, பெண்களின் உறுப்புகளை சிதைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மகளிருக்கு எதிரான குற்றங்களை களைய தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravindh