close
முகப்புகட்சியில் இணைந்தமைக்கு நன்றி... தமிழிசைக்கு கமல்ஹாசன் மெயில்

கட்சியில் இணைந்தமைக்கு நன்றி... தமிழிசைக்கு கமல்ஹாசன் மெயில்

கட்சியில் இணைந்தமைக்கு நன்றி... தமிழிசைக்கு கமல்ஹாசன் மெயில்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்தமைக்கு நன்றி என தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு வாழ்த்து மின்னஞ்சல் வந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது தொடக்க நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் "மய்யம் விசில்" என அழைக்கப்படும் புதிய செல்போன் செயலி ஒன்றை அறிமுகம் செய்தார். மேலும் மக்கள் பிரச்சனைகளை பற்றிப் பேச #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles என்ற ஹேஷ்டேக்கில் பேசலாம் என தெரிவித்தார். அண்மையில் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கினார். 

இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களுக்கான சேர்க்கை, இணையதளம் மூலம் நடைபெற்று வருகின்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கட்சியில் உறுப்பினராக இணைந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, கமல்ஹாசன் தனது கட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் அனைவர்க்கும் கட்சியின் உறுப்பினர் ஆனதற்கு நன்றி என மின்னஞ்சல் அனுப்புகின்றார். இப்படி நடைபெற்றால் இறுதியில் அவர் கட்சியில் யார் தான் உறுப்பினர் என கேள்வி எழுப்பினார்.