அதிமுக அரசு பத்திரிக்கையாளர்களை அரவணைக்கிறது - எஸ்.பி.வேலுமணி

share on:
Classic

அதிமுக அரசு பத்திரிக்கையாளர்களை அரவணைக்கிறது. பத்திரிக்கைகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழக மக்களுக்கு ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துகளை தெரிவித்தார். 

பின்னர் பேசிய அவர்,  கோவை மாவட்டத்தில் நீர்நிலை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளில் வசிப்பவர்களுக்கு கீரணத்தம், வெள்ளலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

குடும்பத்தில் திருமணமானமாகியும் ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சித்தாபுதூர் வி.கே.கே.மேனான் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. அதில் மாற்று இடம் வழங்குவதில் விடுபட்டுள்ள 53 குடும்பங்களுக்கு தகுதி இருந்தால் வீடு கொடுக்கப்படும்

கடந்த 13-ம் தேதி பேரூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் காலி நாற்காலிகள் இல்லை. செய்தியாளர்களின் கேமரா பறிக்கப்பட்டது பற்றி தெரியாது. அப்படி இருந்தால் கேமரா பறித்தவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அதிமுக அரசு பத்திரிக்கையாளர்களை அரவணைக்கிறது. பத்திரிக்கைகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் தொலைக்காட்சிகள் யார் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது உங்களுக்கே தெரியும் எனத் தெரிவித்தார். 
 

News Counter: 
100
Loading...

sankaravadivu