அரசு பேருந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 30 பேர் படுகாயம்

share on:
Classic

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலிருந்து தென்காசி  நோக்கி காலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. நல்லூரில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். குண்டும் குழியுமான சாலையே விபத்துக்கு காரணம் என பயணிகளும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind