காதலியை கொலை செய்து கிணற்றில் வீசிய காதலன் 

share on:
Classic

சிவகாசி அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை கொலை செய்த இளைஞர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்தவர் மாரீஸ்வரி. தனது கணவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக தனியாக வசித்து வரும்  நிலையில், அதே பகுதியை சேர்ந்த மாரிப் பாண்டி என்பவரை காதலித்து வந்துள்ளார். மாரிப்பாண்டி வேறு பெண்னை திருமண செய்ய திட்டமிட்டுள்ளதை அறிந்து மாரிப்பான்டியுடன் காதலி மாரீஸ்வரி  தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் மாரீஸ்வரியை மாரிபாண்டி தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் உயிரிழந்த மேலும், கை கால்களை கட்டி செங்கமலநாச்சியார்புரம் அருகேயுள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு வெளியூருக்கு தப்பியுள்ளார்.  இந்நிலையில், அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்த மாரிப்பாண்டி தான் மாரீஸ்வரியை கொலை செய்து கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் 15 நாட்கள்  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu