ஃபேஸ்புக் நிறுவனருக்கு எதிராக உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு

share on:
Classic

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்கிற்கு (Mark Zuckerberg) எதிராக உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது அந்நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் அதிகாரபூர்வ கடித அச்சுகள் மற்றும் அரச முத்திரைகள் ஃபேஸ்புக் தளத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனை, ஸ்கிரீன்ஷாட் ஆதாரமாக எடுத்துக்கொண்டு, வழக்கறிஞர் ஓம்கார் என்பவர் உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கான மனுவில், உரிய அனுமதி பெறாமல் அரச முத்திரைகளை இணையத்தில் பயன்படுத்தியது குற்றச்செயல் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க், முதன்மை செயல் இயக்குனர் ஷெரில் சான்பெர்க், தலைமை தயாரிப்பு அதிகாரி கிறிஸ் காக்ஸ் மற்றும் இந்தியாவிற்கான ஃபேஸ்புக் பொறுப்பாளர் அஜித் மோகன் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெறும் என  தலைமை நீதிபதி அனந்த் பிரகாஷ் சிங் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu