குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு
close
முகப்புகுரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு

தேனி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆளுநர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அவருடன் அமைச்சர் அன்பழகன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உடன் சென்றனர். முன்னதாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 10 பேர் உயிரிழந்த சம்பவத்தால் மிகுந்த துயரமுற்றதாக தெரிவித்துள்ளார். 

மேலும், தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.