கே.ஆர்.பி அணையில் சேதமடைந்த முதல் மதகை மாற்றி அமைக்கும் பணி தீவிரம் 

Classic

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் சேதமடைந்த முதல் மதகை மாற்றி அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. 

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் பிரதான முதல் மதகு கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி உடைந்தது. இதனால் அணையில் இருந்த 1 புள்ளி 4 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலந்தது. இதனையடுத்து, தற்காலிக மதகு பொருத்தப்பட்டு 52 அடியில் இருந்த அணையின் உயரம் 44 அடியாக குறைக்கப்பட்டது. 

இதன்பின்னர் விவசாயிகளின் தொடர் போராட்டத்தால், புதிய மதகை அமைக்க அரசு சார்பில்  3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்நிலையில்,  தற்போது அணையின் நீர்மட்டம் 31 அடியாக குறைக்கப்பட்டுள்ளதால், இன்று புதிய மதகு அமைக்கும் பணி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. 

மேலும், இந்த பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100

sankaravadivu