பேரணை வாய்காலில் குளிக்கச் சென்ற வாலிபர் மாயம்

Classic

பேரணை வாய்காலில் குளிக்க சென்ற போது மாயமான வாலிபரின் உடலை 2-வது நாளாக  தீயணைப்புத்துறையினர் தேடிவருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் வைகைஅணைக்கு கீழ் உள்ள சங்கரமூர்த்திபட்டி பகுதியில் பேரணை வாய்கால் உள்ளது. நேற்று மாலை இந்த வாய்க்காலுக்கு லட்சுமிபுரத்தை சேர்ந்த சோலைராஜா என்ற வாலிபர் தனது மாமாவுடன் குளிக்கச்சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் சோலைராஜா, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், நேற்று முழுவதும் வாலிபரின் உடலை தேடினர். ஆனால் உடல் கிடைக்காததால் 2-வது நாளாக இன்றும் வாய்காலில் கரை ஓரப்பகுதிகளில் தேடி வருகின்றனர்

News Counter: 
100
Loading...

sankaravadivu