நைட் 9 மணிக்கு போன நோண்டுறீங்களா ? கான்ஃபார்ம் கண்ணு போச்சு !

share on:
Classic

உங்கள் கண்களை இல்லை உங்கள் அருகில் இருப்பவரின் கண்களை சற்று பாருங்கள். கண்களை சுற்றி கருவளையங்கள் உள்ளதா ? கண்கள் பொலிவிழந்து சோர்வாக உள்ளதா ? உண்மைய சொல்லுங்க அப்ப நீங்க நைட் 9 மணிக்கு மேல போன நோண்டுறீங்களா ? அப்படித்தான ? இது. மொபைல் காலகட்டம். இப்ப போய் போன நோண்டாதீங்கனு சொன்னா கான்ஃபார்ம் கோவம் தான் வரும். நாம் பிரச்னையை பற்றி பேசாமல் அதனை எவ்விதம் சரி செய்வது என்பது குறித்து பாப்போம் .

1. கண்கள் பொலிவாக இருக்க இரவு பொழுது நல்ல உறக்கம் தேவை. மொபைல் பார்ப்பதை இரவு 9 மணிக்கு மேல் தவிர்த்து விடுங்கள். இரவு பொழுது அதிகம் டிவி பார்க்காதீர்கள்.  

2. நேரங்கெட்ட நேரத்தில் தூங்குவது மிக தவறு. காலாகாலத்தில் தூங்கி அதிகாலைப் பொழுது எழ கற்றுக்கொள்ளுங்கள். 

3. காய்கறி, பழங்கள் அதிகம் எடுத்து கொள்ளுங்கள். மன அழுத்தம், கவலைகள் என அனைத்திற்கும் தூங்கச் செல்லும் முன் மூட்டை கட்டிக்கொள்ளுங்கள். 

4. இரவு தூங்கும் முன் கண்களில் வெளிப்பகுதியில் விளக்கெண்ணெய் தடவி வந்தால் கண்கள் பொலிவு பெரும். 

5. கண்களின் வெளிப்பகுதியில் தயிர் தடவி வர நல்ல ரிசல்ட் கொடுக்கும். 

6. தேங்காய் எண்ணெய்யுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து கண்களைச் சுற்றிலும் தேய்த்து வந்தால் சுருக்கம் நீங்கி பொலிவு பெரும். 

7. வெள்ளரிக்காய் / உருளை கிழங்கு வட்டமாக நறுக்கி வைக்க கண்கள் குளிர்ச்சியடைந்து புத்துணர்ச்சி பெரும். இதனால் சுருக்கங்கள் மறையும் 

8. இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயை கண்களில் தடவு வந்தால் கருவளையம் நீங்கும் 

9. பாதாம் பருப்புகளை இரவில் தண்ணீரில் போட்டு ஊறவைத்து அதிகாலை சாப்பிட்டு வந்தால் கண்களில் சுருக்கம் நீங்கும். 

10.உடலில் நீர் சத்து குறைந்தால் கண்கள் சோர்வடையும் . அதிகம் நீர் அருந்த வேண்டும். நீர் அருந்தினால் உடலில் எவ்வித நோய்களும் வராது. 

11. கண்களைச் சுற்றி உள்ள சுருக்கங்கள் மறைய பப்பாளியை மசித்து தடவலாம். கற்றாழையின் உள்ளே உள்ள ஜெல்லை தடவலாம் 

12. இதுக்கு நிரந்தர தீர்வு நைட் 9 மணிக்கு மேல போன நோண்டுறத நிறுத்துனீங்கனா உங்க கண்ணு சும்மா ஜம்முனு இருக்கும். 

News Counter: 
100
Loading...

sankaravadivu