கேரளாவில் வாகனங்களை அடித்து உடைக்கும் காவல்துறையினர்

share on:
Classic

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என்ற உத்தரவை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பம்பா பகுதியில் சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்களை காவல்துறையினர் அடித்து உடைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் இருசக்கர வாகனங்களை அவர்கள் வேண்டுமென்றே அடித்து உடைக்கின்றனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று கேரளாவில் முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனையொட்டி திருவனந்தபுரம்,கொச்சி, நிலக்கல்  உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் மற்றும் கார்கள் இயங்கவில்லை. இதனால் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் காத்துக்கிடக்கின்றனர்.

 

News Counter: 
100
Loading...

sankaravadivu