வீழ்ச்சியில் இருந்து மீண்டு எழுந்தது மும்பை பங்குச் சந்தை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புவீழ்ச்சியில் இருந்து மீண்டு எழுந்தது மும்பை பங்குச் சந்தை

வீழ்ச்சியில் இருந்து மீண்டு எழுந்தது மும்பை பங்குச் சந்தை

February 07, 2018 143Views
வீழ்ச்சியில் இருந்து மீண்டு எழுந்தது மும்பை பங்குச் சந்தை

நேற்று சரிவுடன் நிறைவடைந்த மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின.

கடந்த 2011ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகள் கடனில் சிக்கித் தவித்த போது, அதன் பாதிப்பு அமெரிக்க சந்தையிலும் எதிரொலித்தது. அதன்பின்னர் கடந்த 7 ஆண்டுகளில் முதன் முறையாக நேற்று பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்தித்தது, இதனால் முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 238 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 434 இல் வர்த்தகம் இருந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 89 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 587-ல் வணிகம் இருந்தது.