தித்திக்கும் தேனின் மகத்தான மருத்துவ குணங்கள்..!

Classic

இரவு தூக்கத்திற்கு முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து  குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். 

1 வயது தாண்டிய குழந்தைகளுக்கு தினமும் 1 ஸ்பூன் தேன் கொடுத்தால் பசி எடுக்கும்.

முகத்தில் வறட்சி இருந்தால் தொடர்ந்து தேன் அருந்த சருமம் மிருதுவாகும். 

அதிக கொழுப்பு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தேன் அறிய மருந்து. 

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் 2 ஸ்பூன் தேன் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுக் காந்தல், அல்சர் குறையும்.

வெதுவெதுப்பான நீரில் தொடர்ந்து தேன் கலந்து சாப்பிட்டு வர வறட்டு இருமல், தொண்டை புண்  குணமாகும். 

மாதுளம்பழ ஜூஸுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.

தேனுடன் பலாப்பழம் சாப்பிட முகம் பொலிவாகும்.

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

News Counter: 
100
Loading...

sankaravadivu