close
முகப்புநியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்யக் கோரி கிராம மக்கள் மனு 

நியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்யக் கோரி கிராம மக்கள் மனு 

April 10, 2018 169Views
நியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்யக் கோரி கிராம மக்கள் மனு 

பொட்டிபுரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்யக் கோரி பொட்டிபுரம்  ஊராட்சிக்கு உட்பட்ட 4 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ரூபாய் 1500 கோடி செலவில் நியூட்ரினோஆய்வு மையம் அமையவுள்ளது.

 இத்திட்டதை தடை செய்யகோரி தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், இராமகிருஷ்ணாபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

இவற்றை மீறி நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்தால் பல்வேறுபோராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.