close
முகப்புஅமெரிக்க வரலாற்றிலேயே மிகவிரிவான உள்கட்டமைப்பு மசோதாவை வெளியிட்ட டிரம்ப்

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவிரிவான உள்கட்டமைப்பு மசோதாவை வெளியிட்ட டிரம்ப்

February 13, 2018 260Views
அமெரிக்க வரலாற்றிலேயே மிகவிரிவான உள்கட்டமைப்பு மசோதாவை வெளியிட்ட டிரம்ப்

ஒன்றரை லட்சம் கோடி டாலர் மதிப்பீட்டிலான மிகப்பெரிய அமெரிக்க உள்கட்டமைப்புத் திட்டத்தை அந்நாட்டு அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு, அமெரிக்காவின் அனைத்து ஆளுநர்கள் மற்றும் மேயர்களுடன் சிறப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்கட்டமைப்பு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அப்போது பேசிய டிரம்ப், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவிரிவான உள்கட்டமைப்பு மசோதா என வர்ணித்துள்ள அதிபர் டிரம்ப், சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் மட்டுமின்றி, குடிநீர், வடிகால் முறைகள், நீராதாரங்கள், நீர்வழிகள், எரிசக்தி, ஊரக உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமையும் என்றார். 

அமெரிக்கர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க, இந்த மசோதா மீது அமெரிக்க நாடாளுமன்றம் விரைந்து செயல்பட வேண்டும் எனவும் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த திட்டம், அடுத்த 10 ஆண்டுகளில், குறைந்தது ஒன்றரை லட்சம் கோடி டாலர்கள் அளவுக்கு புதிய முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.