close
முகப்புசிகிச்சை பெற்று காட்டுக்குள் சென்ற குட்டியானை உயிரிழப்பு 

சிகிச்சை பெற்று காட்டுக்குள் சென்ற குட்டியானை உயிரிழப்பு 

March 12, 2018 190Views
சிகிச்சை பெற்று காட்டுக்குள் சென்ற குட்டியானை உயிரிழப்பு 

பழனி வனபகுதியில் இருதினங்களுக்கு முன்பு வனத்துறையினர் சிகிச்சை அளித்து காட்டுக்குள் அனுப்பிய ஒரு வயது பெண் யானை குட்டி இன்று உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ரெங்கசாமி கரடு வனபகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு வயது பெண் குட்டி யானைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த  பழனி வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள்முருகன், மருதபாண்டி உதவியுடன் குட்டியானைக்கு பத்து பாட்டில் குளுகோஸ் செலுத்தி சிகிச்சை அளித்தனர். 

பின்னர், உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து, வனத்துறையினர் குட்டி யானையை காட்டுக்குள் விட்டு, அதனை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பாலசமுத்திரம் கிராமத்தை அடுத்து உள்ள காப்புகாட்டில் அந்த குட்டியானை இறந்த நிலையில் கிடந்துள்ளது. பின்னர் வனத்துறையினர், இறந்த குட்டியானையின் சடலத்தை எடுத்து அடக்கம் செய்தனர்