close
முகப்புவிசாரணை ஆணையம் என்பது பள்ளிக்கூடம் அல்ல...பூங்குன்றனுக்கு ஆறுமுகசாமி எச்சரிக்கை

விசாரணை ஆணையம் என்பது பள்ளிக்கூடம் அல்ல...பூங்குன்றனுக்கு ஆறுமுகசாமி எச்சரிக்கை

விசாரணை ஆணையம் என்பது பள்ளிக்கூடம் அல்ல...பூங்குன்றனுக்கு ஆறுமுகசாமி எச்சரிக்கை

விசாரணை ஆணையம் என்பது பள்ளிக்கூடம் அல்ல என பூங்குன்றனுக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையத்தலைவர் ஆறுமுகசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் உடல்நிலை சரியில்லை என்றும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பூங்குன்றன்றனின் வழக்கறிஞர் செல்வபெருமாள் ஆணையத்திடம் முறையிட்டார் . 

ஆனால் , பூங்குன்றனின் கையொப்பமோ அல்லது மருத்துவரின் சான்றிதழோ பெறாமல் வாய்மொழியாக கோரியதால் பூங்குன்றனின் வழக்கறிஞரை முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி கடுமையாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து பூங்குன்றன் ஆஜராவதற்கு ஆறுமுகசாமி ஆணையம் மாற்று தேதி ஒதுக்காததால், வழக்கறிஞர் செல்வபெருமாள் திரும்பச்சென்றார்.  

இதே போல் முதன்முறை ஆஜராவதில் இருந்து விலக்கு பெறுவதிலும் உடல்நிலையையே பூங்குன்றன் தரப்பு காரணம் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.