காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக உள்ளதால் அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது - தங்கமணி

Classic

காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக உள்ளதால் அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வருவாய் மற்றும் சமூக பாதுகாப்பு துறை சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு ஆயிரத்து 288 பயனாளிகளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இவ்விழாவில் நாமக்கல்லின் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி மின் துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன்படி ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் நடைபெறுவதாகவும், தற்போது காற்றாலை மூலம் அதிகளவு மின்சாரம் கிடைப்பதால் அனல் மின் உற்பத்தி குறைக்கப் பட்டுள்ளதாகவும்,தெரிவித்தார்.

News Point One: 
காற்றாலை மின் உற்பத்தி அதிகம்
News Point Two: 
காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக உள்ளதால் அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது
News Point Three: 
மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்
News Counter: 
100
Loading...

aravindh