மும்தாஜ் கல்லறையை பார்க்கத் தனி கட்டணம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புமும்தாஜ் கல்லறையை பார்க்கத் தனி கட்டணம்

மும்தாஜ் கல்லறையை பார்க்கத் தனி கட்டணம்

மும்தாஜ் கல்லறையை பார்க்கத் தனி கட்டணம்

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் உள்ள மும்தாஜ் கல்லறையை பார்க்க ஏப்ரல் மாதம் முதல்  தனி கட்டணம் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும், தாஜ்மஹால் ஆக்ரா நகரின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இதனை சுற்றிப்பார்க்க தினமும் உள்நாடுகள் உட்பட,வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். 

இந்நிலையில், தற்போது தாஜ்மாஹாலை சுற்றிப்பார்க்க உள்நாட்டவர்களுக்கு 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், தற்போது வரை தாஜ்மஹாலின் உட்பகுதியில் உள்ள மும்தாஜ் கல்லைறையை சென்று பார்வையிட கட்டணம் ஏதும் கிடையாது. 

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் வெளியே சுற்றிப்பார்க்க மூன்று மணி நேரத்திற்கு 50 ரூபாயும், உள்பகுதிக்கு சென்று பார்க்க கூடுதலாக 200 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும், இந்த கட்டண உயர்வு வெளிநாட்டவர்களுக்கு பொருந்தாது எனவும் கூறப்படுகின்றது.